சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! ‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும். கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது…