தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை   தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.    தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.    கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…