செய்தக்க செய்யா ஆளுநர் திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் எண்:466) ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும். ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால்,…