சிங்கள அரசின் ஏமாற்று வேலை   இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில்  ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும்  உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.   அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது.   2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…