இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!   இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.   ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.   ஈழம் என்றால் பொன் எனப் பொருள்….