(அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 094. சூது பரம்பரைப் புகழ்,பண்பு, மதி,அன்பு பொருள்கெடுக்கும் சூதை விடு. வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம்,      தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று.  மீன்விழுங்கிய தூண்டில் இரைதான்          சூதில் வருவெற்றி; வேண்டாம்.   ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல்      நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு?  ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும்        நன்றுஆம் வாழ்வு உண்டாமோ?        உருள்ஆயம் ஓயாது கூறின், பொருள்ஆயம்,  போஒய்ப் புறமே படும்.  ஓயாது…