[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 47. செருக் கொழித்தல் செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல். செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும். அஃதறி யாமையி னங்குர மென்ப. அஃது அறியாமையின் அடிப்படை ஆகும். ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு. ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும். அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு. செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும். அழியு முடம்பை யளிப்பது மஃதே. செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும். செருக்கினர்…