சொல்லடா! – சுரதா கோங்கம் மலர் பூத்த-பசுங் குன்றம் முழுநிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர் வண்ணப் பனிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள் சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து- நான் மகிழ்ந்திடச் சொல்லாயோ!   “இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும் இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள் ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ் ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்’-என்று மாமல்லா நீ சொல்லடா!   ‘வானை அளந்திடுவோம்-புது வையம்  நிறுத்திடுவோம்! தேனைநிகர் தமிழ்க்குத்-துளி தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்- நாங்கள் ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச் சேனை…