இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 3.1 திருமண வாழ்த்து  ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை. திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள்,…