தமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்! தவறான ஒன்றைச் சரியென நம்பும் மாயை பலரிடமும் உள்ளது. அதுபோன்ற மாயைதான் தமிழ் 99 விசைப்பலகையைச் சரியென நம்புவதும். அரசு, வல்லுநர் கருத்தை ஏற்பது என்ற முடிவில் மாயையை மெய்யென நம்பிய இத் தவறான கருத்தை ஏற்றுக் கொண்டது. இதன் விளைவாக, ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில், (தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக்…