(தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு – தொடர்ச்சி) ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தின் விளைவாக அழிவின் விளிம்பில் நிற்கும் மற்ற நாடுகள் எவை? தாழி அன்பர்களின் இந்தக் கவலைதோய்ந்த வினவலுக்கு, பொதுவாக பசிபிக்கு தீவுகள், ஆனால் அவை மட்டுமல்ல என்று விடையிறுக்கலாம். மேலும் துல்லியமாக மாலத்தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளை ஐநா அமைப்பின் காலநிலை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர். 1900க்குப் பின் நாளது வரை கடல்மட்டம் 15 – 25 கீழ் நூறன் கோல்(centimeter) (6 முதல் 10…