மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே!   உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள  தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும்.  சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு…