தமிழன் பெட்பு தமிழன் என்றோர் இனமுண்டு;        தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடை வழியாகும்;        அன்பே அவனுடை மொழியாகும்.       1 அறிவின் கடலைக் கடைந்தவனாம்;        அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்; (1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே        பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.       2 கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்        கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்; புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம்        புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.       3 “பத்தினி சாபம் பலித்துவிடும்“        பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதைச்        செய்தவன் துறவுடை…