தமிழின் இன்றைய நிலை   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனித்துவமான சொல்வளத்தையும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இந்நாள் வரையில், அதன் இளமை மாறாது, வளர்ந்துவரும் தமிழ்மொழி, உலகின் உன்னத மொழிகளாய் அமைந்த ஒருசில மொழிகளுள் ஒன்று. வெறும் இலக்கியமொழியாக மட்டுமே அமைந்துவிடாது, இன்றுமட்டும், வாழும் மொழியாகிய அமைந்த தமிழ்மொழி, உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்பட்டு, அதன் மூலம், பல்வேறு வகையான பேச்சுவழக்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகு தமிழின் இன்றையநிலையை ஆறு கூறுகளாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.   வளர்ந்தோங்கும் இம்மொழியின் சிறப்புகளை மட்டுமே…