தமிழில் முதல் சிறுகதை? தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன். தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர்…