நெஞ்சை மெல்லும் மே பதினேழு   வையகம் காணா வன்கொடுந் துயர்களை வரலாறு மறந்திடு மாமோ? வன்னியில் அந்நாள் சிதைந்த உயிர்களின் வலிகளைச் சொல்லிடப் போமோ? ஒருநூறு ஆண்டுகள் அல்ல, நம்மினம் உள்ளவரை நெஞ்சைப் பிளக்கும் ஒன்றுக்கும் உதவாக் கரைகளாம் நம்மை உறுதியாய் வருங்காலம் பழிக்கும் படைகளைக் கொடுத்தான் பழிகாரன் தில்லியன் பைந்தமிழ் மானம் கெடுத்தான் பல்லாண்டு பல்லாண்டாய் நெஞ்சிலே சுமந்த பழியெலாம் மொத்தமாய் முடித்தான் தடைகளைத் தகர்த்த தமிழ்ப் புலிகளின் தடுப்புகள் யாவுமே உடைத்தான் சதிகாரன் மகிந்தா தன்னுயிர் நண்பனாய்த் தமிழ்க்கேடன் அவனுக்குக்…