தமிழ்ச் செல்வங்கள்: ஒல்    ‘ஒல்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பே! கல் என வீழ்ந்த அருவி ‘ஒல்’ என ஆறாய்த் தவழ்கின்றதாம்! பரஞ்சோதியார் படைப்பு இது! ஒல்லெனத் தவழ்வது சமவெளியில் அன்று! துள்ளி வரும் காட்டில்! அதனால், “கானத்து ஒல்லெனத் தவழ்ந்து” என்றார். மக்கள் செவியில் தென்னை, பனை ஆகியவற்றின் கீற்று காற்றில் ஆடுதல் ‘ஒல்’ என ஒலித்தது. அதனை ‘ஓலை’ என்றனர். பச்சோலைக்கு இல்லை ஒலி என்பதால், காய்ந்த ஓலைக்கு ஒலியுண்டு என்பது தெளிவாகும்.   ஓலைதான், செவ்வியல் மொழிக் கொடைச்…