கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?- கி. வெங்கடராமன்

கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?  தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கடராமன் அறிக்கை!     இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐப்பசி 23, 2047 / 08.11.2016 நள்ளிரவு முதல் 500 உரூபாய், 1000 உரூபாய்த்தாள்கள் செல்லா என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.   கருப்புப் பணத்தையும், கள்ள உரூபாய்த்தாள்களையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள உரூபாய்த்தாள்களைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு…

அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்!

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், புரட்டாசி 09,2047/ 25.09.2016 காலை முதல் மாலை வரை, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குழ. பால்ராசு, தஞ்சை பழ. இராசேந்திரன்,…

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல்.     தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது.  10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 – கி. வெங்கட்ராமன்

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3     இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது.   ஆனால், இதே காலப்பகுதியில்தான் முசுலிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப்பண்டவத்திற்கு(சிகிச்சைக்கு) ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான்வாயிலில்(கேட்டில்) அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’தொடர்பான…

ஈழத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்துக் காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்!

ஈழத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்துக் காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்!   சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சித் தாய்த் தமிழகம் நோக்கி ஏதிலியராய் வரும் தமிழீழ மக்கள், தமிழ்நாட்டில் துன்பங்களுக்கு ஆளாகும் கொடுஞ்செய்திகள் வந்தபடி உள்ளன.   கடந்த 06.03.2016 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள உச்சப்பட்டித் தமிழீழ ஏதிலியர் முகாமில் அரசு அலுவலர்கள் ஆய்வு நடத்தச் சென்றபொழுது இரவீந்திரன் என்ற ஏதிலியர் தன் மகன் மதுரை அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலைக் கூறியும் கூட அதை ஏற்க மறுத்த வருவாய்த்துறை அலுவலர் துரைப்பாண்டி என்பவரின் வன்பேச்சால் மனமுடைந்து தற்கொலை செய்து…

சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!

தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!   தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31.   தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…

ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!

“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”  சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை!   தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா –  கருத்தரங்கம்,  மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.   சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…

“மொழிப்போர் – 50 மாநாடு” – தமிழ்த் தேசியப் பேரியக்கம்!

“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்! பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!     தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டியில், தனியாருக்குச் சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஐப்பசி 05, 2046 / அக். 22, 2015 காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.   தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து கலந்து கொண்டனர்.   சென்னையிலிருந்து, க. அருணபாரதி, பழ.நல். ஆறுமுகம், மதுரையைச் சேர்ந்த அ.ஆனந்தன், இரெ. இராசு, தஞ்சை…

காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி

புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்!   தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும்.   அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு

அன்பான தோழருக்கு வணக்கம்!  சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!  நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி:  9841949462 தலைமைச் செயலகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம்  பேசி: 7667077075, 9047162164 ஊடகம்: www.kannotam.com இணையம்: tamizhdesiyam.com