கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’      ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’   (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’   (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’   (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’     (சிறுபாண். 40; புறம் 48:7)…