தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் ஒழுகலாறுகளையும்(கலாச்சாரத்தையும்) தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஒழுகலாறுகளைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. சமற்கிருதத்திற்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ்…