தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு கன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம் நூலாசிரியர். தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்த கன்னட நடையினைக் கண்டு கைக்கொள்க நூலறி புலவர் நுவன்ற நெறியிது வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51) சமற்கிதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமற்கிருதக் கலப்பு கடூரம் பயக்கும் கன்னட மொழியில் வடெமாழிக்…
