கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது. அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர் விருது (1986 முதல்) மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) கி.ஆ.பெ….

சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்

  சங்கே  முழங்கு !   வரிகளிலே முருகனையே முதலில் பாடி வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப் பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப் பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர் அரிதான பாரதியின் தாச னாகி அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால் ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !   சாட்டையிலே சொற்களினை வீசி மூடச் சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம் வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம் கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக் கூட்டிவந்தே…