‘தருமம்’ தமிழே! –இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம். ‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதால் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத்…