தமிழர் திருமண முறை   அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு உடன்படுவர்.1 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.2 தீய கோள்கள் இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும். விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல் பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்…