தூண்டில் திருவிழா  பள்ளி விடுமுறை நாட்களில் தூண்டிலோடுதான் சுற்றுவோம். கண்மாய், ஊருணி, ஏரி, குளம், குட்டை, ஏந்தல், தாங்கல் எனப் பல்வேறு நீர்நிலை அமைப்புகள் வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பி இருந்த பொற்காலம் அது. பசுமைச் சூழலில் மரமேறுதலும் கவட்டையும் நம் மரபு விளையாட்டாக இருக்கும் வரை பறவைகள் பற்றிய தொடக்கநிலை அறிவு நம்மிடம் இருந்தது. பின் வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுகிற போது இயற்கை பற்றிய அறிவு விரிவடையும். இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் மரபு அறிவியல் வளர்ச்சியின் இயல்பு…