இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01

  இந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும்  அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும்…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 9

  –    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முன் இதழ்த் தொடர்ச்சி) 5. அரசியல் வாழ்க்கை பிளட்டோ கூறுவதுபோல், மனிதன் இயற்கையிலேயே அரசியல் பொருளாவன். எனவே அரசியல் அவனோடு வளர்கிறது.  ‘மனிதன், தன்னுடைய ஆட்களுடன் கூடவே வளர்கிறான்’ என்பதை அரிசுடாடில் வலியுறுத்துகிறார். எனவே அரசியல் வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.  முந்தைய தலைப்பில் இருந்து தொல்காப்பிய காலத் தமிழர்கள் மன்பதை வாழ்க்கையில் முன்னேற்ற நிலையை அடைந்திருமையை உணரலாம். அவர்களின் அரசியல் வாழ்வும் பின்தங்கியதன்று. தொல்காப்பியர் வாழ்க்கையையும் இலக்கியம் போல் அகம்,…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 8

–    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) பேராசிரியர் எம்.எசு. பூரணலிங்கம்,  “பண்பாடு மிக்க தமிழர் தம் கடவுளை, மேனிலையில் உள்ள கொடிநிலை, பற்றற்றக் கந்தழி, அருள் வழங்கும் வள்ளி என மூவகையாகக் கண்டனர். சுருங்கக்கூறின், தம்மை உருவாக்கி ஆள்பவருக்கு, முதன்மைப் பண்புகளாக எங்கும் உளதாகும் தன்மை, பற்றின்மை, அருள் முதலியவற்றை  எடுத்தியம்பினர் எனலாம்.” (தொல்காப்பியம் பொருளதிகாரம் விளக்கவுரை பக்கம் 335) (தமிழ் இந்தியா பக்கம் 53.) பால்வரைதெய்வம் (பொருள். 57) என்று சொல்வதிலிருந்து, கடவுள் ஊழி்னை…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 6

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   3.9. பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்:  ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர்.  ஒருவர் தன் வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத் தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது.  தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது என  குறிப்பிடுகின்றார். (நூற்பா 74,பொருள்). மன்பதை தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. இவை அறிவர், அரசர், மக்கள், கற்றோர், கலைஞர்கள், மேற்கூறிய பகுப்புகளில் சேராத பிறர்  என்போர் ஆவார் (நூற்பா 75, பொருள்)….