(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்                                (திருக்குறள் 463)   இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச்  சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி   பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…