[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 46. துயி லொழித்தல் உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம். உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும். அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில். அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும். சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும். கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும். கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும். கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும் 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம். அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்….