வேதியியல் –   chemistry: தனிமம் சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்புகளையும் ஆராயும் இயைபியல் துறை. வேதிவகைப்பாட்டியல் –   chemo-taxonomy: வேதிப் பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்த பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வுத் துறை. திரைப்படவியல் – cinematography: திரைப்படம் தொடர்பான நுணுக்கங்களை ஆராயும் துறை. மருத்துவ மரபணுவியல் – clinical genetics: நோயாளியை நேரடியாக உற்று நோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயும் மருத்துவத் துறை. மருத்துவ நோய் இயல் – clinical pathology: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர், சளி முதலியவற்றை…