தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2        பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும்  செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல்  தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது.      தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…