(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 12. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி)   இக்கதை, ‘எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்லபாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழையனூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.’ என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால், வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா–னாதலால்வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்யாதவர்கோ…