நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்
நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம் புலவர் த.சுந்தரராசன் அறிவிப்பு தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை அமைக்க உள்ளது. வரும் சித்திரை முதல் வாரம் இதற்கான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொல்காப்பியம் அரங்கேறிய அவையை – தமிழ்ச்சங்கத்தை – நடத்திய வேந்தர் நிலந்தரு திருவின் பாண்டியன் படமும், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய புலவர் பனம்பாரனார் படமும் திறக்கப்பட வேண்டும் எனச் சிலையமைப்புக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, தமிழன்பர்களும் ஓவியர்களும்…
கன்னித் தமிழ் மிகப் பழையவள்; ஆனாலும் மிகப் புதியவள்
தமிழ்மொழி பல காலமாகத் தமிழருடைய கருத்தைப் புலப்படுத்தும் கருவியாக இருந்தது. பிறகு கலைத் திறமை பெற்றுப் பல பல நூல்களாகவும் உருப் பெற்றது. மனிதர்கள் பேசும் மொழி நாள்தோறும் உண்ணும் உணவைப் போன்றது. அவருள்ளே புலவர் இயற்றிய நூல்கள் வசதியுள்ளவர்கள் அமைத்த விருந்தைப் போன்றவை. தமிழில் இந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை. பேச்சு வழக்கு மாயாமல் நூல் படைப்பும் மங்காமல் மேலும் மேலும் வளர்ந்துவரும் ஒரு மொழியில் அவ்வப்போது புதிய புதிய துறைகள் அமைவது இயற்கை. புதிய புதிய அழகு பொலிவதும் இயல்பே….
தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்
“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…
பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்
கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன….
காதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இலக்குவனார்
காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 129-130
தமிழ்ப்பண்பாடே உலக நாகரிக ஊற்று – சி. இலக்குவனார்
தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே ‘ தமிழ் என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உளர். ஆரியர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத்தினால் நன்கு அறியலாகும். அப் பண்பாடும் நாகரிகமும் இக் காலத்திலும் போற்றிக்கொள்ளக் கூடியனவாய் உள்ளன. அங்ஙனமிருந்தும் உலகப் பண்பாடு, உலக நாகரிகம், உலக வரலாறு என்று கூறப்படும் நூல்களில் தமிழகத்தைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் காண இயலாது. கிரேக்கநாட்டுப் பெரியவர்களைப்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08 “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…
தொல்காப்பியர் தலைசிறந்த மொழிநூல் புலவர் – சி. இலக்குவனார்
சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப்படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக்குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக்குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும் ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள்ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவராகவும் விளங்குகின்றார். மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி; அக்கருவி வழக்காற்றினுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும்…
வேற்றுமொழிப் பெயர்ச் சொல்லைத் தமிழோசைவூட்டியே கொள்ளல் வேண்டும் – சி.இலக்குவனார்
வேற்று மொழிப் பெயர்ச் சொல்லைக் கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்படின் கொள்ளலாம் என்றும், கொள்ளுங்கால் தமிழோசையூட்டியே கொள்ளல் வேண்டுமென்றும் ஆசிரியர் கூறியிருப்பதை அறியாது வரையறையின்றி வேற்று மொழிச் சொற்களை அம்மொழிகளில் உள்ளவாறே தமிழில் எடுத்தாளத் தொடங்குவது தமிழுக்கு அழிவு தேடித் தருவதாகும்; தொல்காப்பியர் கொள்கைக்கு மாறு பட்டதாகும்; மொழி நூலுக்கும் முரண்பட்டதாகும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 117
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி) 07 ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 ) செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா…
நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் – தொல்காப்பியர்
நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள் சிதைவெனப் படுபவை வசையற நாடின், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல் கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல், தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனம்கோள் இன்மை, அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும். தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது. புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –…
