சசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க.    நாயகன் இல்லா நாவாய் (தலைவன் இல்லாத கப்பல்)போல ஆளுங்கட்சி தடுமாறித் தத்தளித்துக் கொண்டுள்ளது- மேனாள் முதல்வர் செயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்த பொழுதே ஆட்சிச் சக்கரம் சுற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. அவர் மறைந்த பின்னர் ஆளுங்கட்சியின் பிளவால் குளிர் காயலாம் எனச் சிலர் எண்ணினர்.  ஒற்றைஇலக்க எண்ணிக்கையைத் தாண்டாச் சிலர் தனி அணி கண்டாலும், கட்சியில் பிளவு இல்லை என்றுதான்சொல்ல வேண்டும். இந்தச்சூழலில் எந்தக் கட்சியிலும் ஏற்படும் பிணக்குதான் இது. ஆனால், மேலே உள்ள ஒருவன்,…