(தொடர் கட்டுரை) 2     1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் இசுலாமியர்களின் மசூதி மற்றும் நிருவாகத்தை இசுலாமியர்களிடம் ஒப்படைத்தது. எந்தக் குறிப்பிட்ட சாதியினரிடமோ, துணைச்சாதியினரிடமோ, சாதிக்கு வெளியே இருந்தவர்களிடமோ ஒப்படைக்கவில்லை; எந்தக் குறிப்பிட்ட பிரிவினரிடமும் ஒப்படைக்கவில்லை.  மசூதிகள் இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் அவர்கள் தங்கள் இசுலாமியச் சமயச்சட்டத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். இறைவனுக்காக ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் ‘வக்பு’ எனப்பட்டது. அதன்பின்னர் வக்பு வாரியமாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் ‘தமிழ்நாடு வக்பு வாரியம்’ என அமைக்கப்பட்டு அதன் தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு வக்பு செய்யப்பட்ட சொத்துக்களைப்…