(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்  25. நடுவு நிலைமை நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல். நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும். பிறவுயிர் நடுவள விறனடு வின்மை. பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும். நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள். அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும். அறனெலா நிற்பதற் கஃதா தாரம். எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும். அதுசிறி தசையி னறனெலா மழியும். நடுவு நிலைமையில் இருந்து…