ஆறு மலையில் பிறந்த நதி மண்ணில் குதிக்கிறது அலைகள் கொலுசுகட்டி அசைந்து நடக்கிறது நிற்க நேரமில்லை நெடுந்தொலைவு போகிறது மௌனம் உடைத்தபடி மனம்விட்டு இசைக்கிறது கல்லில் அழகாக கூழாங்கல் செய்கிறது தண்ணீர்ப் பாலாலே தாவரங்கள் வளர்க்கிறது நதிகள் கரையோரம் நந்தவனம் மலர்கிறது காயாமல் பூமியைக் காப்பாற்றி வைக்கிறது கல்லில் கிழிபட்ட காயம் மறைக்கிறது வெண்பல் நுரைகாட்டி வெளியில் சிரிக்கிறது இடையில் கோடுகளாய் எங்கெங்கோ பிரிகிறது கடல்தான் கல்லறையா கடைசியில் முடிகிறது நம்முடைய அழுக்குகளை நதிகள் சுமக்கிறது காரணம் இதுதான் கடல்நீர் கரிக்கிறது – திரைப்படப்…