(பங்குனி 30, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) கரு “நந்தன் வெறுக்கை  பெற்றாலும் தங்கார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பிரிந்தான். தலைவி வருந்தினாள். தோழி ஆற்றினாள்)  தலைவி: தோழி! பாணரை விடுத்தோம். புலவர்கள் சென்றார்கள். தலைவனை அடைந்தனரோ இல்லையோ?  தோழி: அம்ம! அவரை அடைந்திருப்பார். உன் துயர் நிலையைக் கூறுவர். அவரை எண்ணி எண்ணி இளைத்துள்ள நிலையை எடுத்து இயம்புவர்.  தலைவி: என்ன கூறியும் என்ன பயன்? அவர் எந்நிலையில் உள்ளாரோ?…