ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன்   இந்தியத் துணைக்கண்டத்தில்  மாநில ஆளுநர் என்பவர்  நடைமுறையில் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேயான  மாநில நலம்நாடும் தூதுவராக இருப்பதில்லை. மத்திய அரசின், சொல்லப்போனால் மத்திய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக,  ஏவலராக, எடுபிடியாக,  மத்திய அரசின் சார்பில் மாநில அரசை ஆட்டுவிக்கும் முகவராக  இருக்கின்றார் என்பதே அரசியலாரின் – அனைவரின் கருத்தாகவும் உள்ளது. இதற்கு விதிவிலக்கானவரல்லர் தமிழகப் பொறுப்பு ஆளுநர். பொறுப்பு ஆளுநர், பொறுப்பான ஆளுநராக இல்லாமல்,  தன் முதலாளியான மத்திய ஆளுங்கட்சியின் கட்டளையை நிறைவேற்றும் …