; சிற்றருவி! பேரருவி!   [குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.]   இறை வணக்கம் அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத் தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல் குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத வற்றாத் தமிழூட்ட வா !   கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு ! ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது…