நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். பொருள்: முடி நரைத்து மூப்பு வரும் என்று இளமைப்பருவத்தில் கேடானவற்றைத் கைவிட்டவர்கள் நல்லறிவாளர்கள். குற்றம் நீங்காத நிலையில்லா இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பவர்கள், முதுமையில் துன்பத்துடன் ஊன்றுகோல் ஊன்றி நிற்பார்கள். சொல் விளக்கம்: நரை = மூப்பின் அடையாளமான வெண்முடி; வரும் என்று =வருமென்று; எண்ணி = நினைத்து; நல் = நல்ல; அறிவாளர் = அறிவுடையவர்கள்; குழவியிடத்தே = இளமைப் பருவத்தில்;…