“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ?  பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.   சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…