எழுவகை நாடோடிப் பாடல்கள்   நாடோடிப் பாடல்களில் பல வகைகள் உண்டு. ஏற்றம் இறைத்தல், மீன்  பிடித்தல், சுண்ணாம்பு குத்துதல் முதலிய தொழில்களைச் செய்பவர்கள் அத்தொழில்களால் உண்டாகும் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள். நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள் பாடும் பாடல்கள் நீண்டனவாக இருக்கும். அவை ஒரு வகை.  வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை.   திருமணத்தில் பாடும் பாடல்கள், யாரேனும் இறந்தால் பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது…