நாளம்-vascular   வாசுகுலர்(vascular) என்பதற்கு வேளாணியலில் இரத்தக்குழல்சார், சாற்றுக்குழல்சார், எனவும் புவியியலில் சாறுசெல், நாளஞ்சார் எனவும் கால்நடைஅறிவியலில் இரத்தநாள(ம்) எனவும் பயன்படுத்துகின்றனர். சிலர் குழல் என்கின்றனர். உட்துளை உள்ள பொருள்களைக் குழல்(44), குழாய்(6), தண்டு(14), புழல்(14) எனச் சங்கக்காலத்தில் குறித்துள்ளனர். முதல் மூன்று சொற்களும் டியூப்பு(tube), பைப்பு(pipe), சாப்ட்டு(shaft) முதலான பொருள்களில் கையாளப்படுவதாலும் புழல் என்னும்சொல்லை, உட்துளைப் பொருள்களைவிட உள்ளீடான பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதாலும் வேறு சொல்லால் குறிக்க வேண்டும். நாளம் என்பது சங்கஇலக்கியங்களில் கையாளப்படாவிட்டாலும் இரத்தநாளம் என நாளம் குருதிக்குழாயைமட்டுமே…