அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் சுவைத்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தைத் தந்தது! எதுகையும் மோனையும் இலக்கியத் தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றன! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது! பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே! பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே! வேரினில் பழுத்தபலா விதவையர் எனச்சொன்ன வாழ்வியல் கவிதைகள் வைரத்தின் மகுடமே!…