சரசையூர் ம.கங்காதரம் நூல் அறிமுகவிழா

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் உப அதிபர் சரசையூர் ம.கங்காதரம் அவர்களின் நூல் அறிமுகவிழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் இடம்பெறவுள்ளது. . கணிதத் துறைப் பட்டதாரியாகிய இவர் கைவரி வல்லுநராகவும் விளங்குகின்றார். சரசாலை சரசுவதி வித்தியாலயம் மற்றும் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் தமிழ்மேற் கொண்ட தீராக் காதலினால்  பயன்பாட்டுக்கணக்கையும் தூய தமிழிலேயே கற்பித்தார். . ஏ, பி, சி ஒரு முக்கோணம் என்பதற்கு மாற்றாக அ, ஆ, இ ஒரு முக்கோணம் என கணக்குக் கற்பித்தார். அவர்…

தமிழ்மணம் வீசிய புழுதிவாக்கம்!

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் ‘சங்க இலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியீட்டையும் பரிசளிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தது. இதன் அமைப்பாளர் திரு த.மகாராசன், பிற பொறுப்பாளர்கள் நன் முயற்சியால் தமிழ் மணம் வீசிய அரங்கு நிறைந்தவிழாவாக நடைபெற்றது. கடந்த 16.09.2012 அன்று இம்மன்றத்தின் சார்பில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரையையே இப்பொழுது நூல் தொகுப்பாக்கி உள்ளனர். சங்க இலக்கியக் களஞ்சியம் – ந.முத்து(ரெட்டி) சங்க இலக்கியக் கட்டுரைகள்: ஓர் அறிமுகம் – புலவர் கோ.பார்த்தசாரதி ஆற்றுப்படை நூல்கள் –…

“தமிழ்படிப்போம்” நூல் வெளியீட்டு விழா:

ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்ற “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா: புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைப் பிள்ளைகள் விரும்பும் வகையில் எளியமுறையில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா வைகாசி 30, 2045 /13-06-2014 அன்று ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்றது. விழாவிற்கு வாழ்நாட்பேராசிரியர் சண்முகதாசுஅவர்கள் தலைமை தாங்கினார். சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தொடக்கவுரைநிகழ்த்தினார். பேராசிரியர் சந்திரகாந்தன், பேராசிரியர்இ.பாலசுந்தரம், விரிவுரையாளரான திருமதி செல்வம் சிறிதாசு, கவிஞர் கந்தவனம்பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் திருமதி….

“அர்ச்சனைமலர்கள்” கவிதை நூல்வெளியீட்டு விழா –செருமனி

செருமனிவாழ் எழுத்தாளர் திருமதி. செயா நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘அர்ச்சனைமலர்கள்’ கவிதை நூல் வெயியீட்டுவிழாவும், இலண்டன் தமிழ் வானொலியின் 127ஆவது பொன்மாலைப் பொழுது நிகழ்வும் ஒரே மேடையில் இரு நிகழ்வுகளாகச் சிறப்புடன் நடந்தேறின. செந்தமிழின் இனிமையும் பெருமையும் என்றும் மண்ணோடு மண்டியிட்டுக்கிடந்து மணம் வீசும் தமிழ் மலர்களை உருவாக்கும் பைந்தமிழ்ப்பாசறையாம் நெடுந்தீவு மாமண்ணில் பிறந்து பார் முழுவதும் புகழ் மணம் கமழும் அறிவுசார் குடும்ப வரலாற்றின் சாதனைப்பெண்ணாய், தெள்ளுதமிழ் பெருக்கெடுக்க அள்ள அள்ளக்குறையாத ஆச்சரியத்திறமைக்களஞ்சியம் திருமதி.செயபாக்கியம் யூட் நடேசன்(ஜெயா நடேசன்) அவர்களின் அன்பு நினைவலைகளை…