தமிழ் மொழி   – பண்பட்ட பழமை மொழி இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களைக் கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்லொன்றை உயிர் ஓவியமாய் உகமதில் வாழும் காவியமாய் சிந்தனையைக் கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு தாவரமாய் வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச் செழுத்திட்ட செம்மொழி தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்…