மரவியம் – xylem   சைலம்(xylem) என்பதற்கு வேளாணியலில் சாற்றுத்திசு என்றும் பயிரியலில் நீர் கடத்துத்திசு/சாற்றுக்குழாய் என்றும் கானியலில் சாற்றுக்குழல் என்றும் குறித்துள்ளனர். சிலர் குழல்திசு என்கின்றனர். பேராசிரியர் அ.கி.மூர்த்தி மரவியம் என்னும் சொல்லை அறிவியல் அகராதியில் குறிப்பிட்டுள்ளார். மரம்(105) என்னும் சங்கச்சொல்லின் அடிப்படையிலான இச்சொல்லையே ஏற்ற சொல்லாகப் பயன்படுத்தலாம்.  ஆகவே நாள மெய்ம்மியை(xylem) மரவியம் என்றும் பட்டை மெய்ம்மியை(pholem) பட்டையம் என்றும் சுருக்கமாகக் கூறலாம். மரவியம் – xylem பட்டையம்  – pholem உள்நோக்குமரவியம்-endarch xylem வெளிநோக்கு மரவியம்-exarch xylem துணை (அல்லது…