தமிழ்ப்பகை தாள்  பற்றுவோன்  பதர் ! 1. தமிழ்ப்பகை கால்வீழ்வான் நற்றமிழ                                                   னாகான் உமிழும்வாய்   எச்சி    உணர். 2. தன்மானம்   அற்றே    தகுசீர்  பகுத்த                                                 றியான் என்னிருந்தும்  இல்லானே  தேர். 3. ஈராயிரம்   ஆண்டின்    தமிழ்ப்பகை                                        கால்வீழ்வான் தேரான்   தெளிவில்லான்  தேர். 4. இனம்வீழ்த்த  எண்ணிடும்  ஆரியத்தின்                                                       தாளை மனமொப்பிச்  செல்வானே   மண். 5. நற்றமிழை   முற்றுமே   ஞாலத்                                           தழிப்பானைப் பற்றுவான்   என்றும்   பதர். 6. ஈன்றெடுத்த  தாயை  இழிவுசெய்வான்                                           கால்வீழ்வான் மாண்பில்   மகனாவன்   மன்…