(புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி) 17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள்   வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக்…