(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்   19. பயனில் சொல் விலக்கல் பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே. பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும். அறியா மையினின் றச்சொல் பிறக்கும். பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது. அறியா மையினை யச்சொல் வளர்க்கும். பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும். அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும். பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின்…